• Wed. Nov 27th, 2024

ரீ என்ரி கொடுக்கும் பிரசாந்த் படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்

Mar 2, 2022

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த்.

இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றி இருக்கிறார். அந்தகன் படத்தை உலகம் முழுவதும் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.