இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 48 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இதுவரை 16 ஆயிரத்து 287 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.