• Sun. Jul 7th, 2024

இலங்கையில் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு

Mar 4, 2022

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (சனிக்கிழமை) P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், E மற்றும் F ஆகிய பகுதிகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணிநேர மின்வெட்டும், மாலை 4.30 தொடக்கம் 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிமுதல் 4.30 மணிவரையான காலப்பகுதியில் A, B, C ஆகிய பிரிவுகளில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.