• Sun. Dec 1st, 2024

வெளியானது லெஜண்ட் சரவணனின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்

Mar 5, 2022

நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் லெஜண்ட் சரவணன் தானே நடித்து பிரபலமானார். இவர் தன்னுடைய தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை அஜித்தை வைத்து ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகிபாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கு ”தி லெஜண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.