• Thu. Jan 2nd, 2025

ஐஸ்வர்யாவை ஏமாத்த முடியாது … மனைவி குறித்து பேசிய தனுஷ்!

Mar 17, 2022

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக கூறியது பலருக்கும் அதிர்ச்சி அளித்த நிலையில் ஐஸ்வர்யா குறித்து தனுஷ் பேசியுள்ள காணொளி இப்பொழுது வைரலாகிறது.

நடிகர், இயக்குனர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் வரை பிரபலமாக உள்ள தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஏமாத்த முடியாது இருவரும் மீண்டும் இணைவார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில் ஐஸ்வர்யா குறித்து தனுஷ் பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் தனது இரு மகன்களும் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருந்தாலும் யாத்ரா தான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்.

ஆனால் லிங்கா அம்மா ஐஸ்வர்யாவை போன்றவர் அவ்வளவு எளிதில் ஏமாத்த முடியாது. ஐஸ்வர்யா நல்லா படிச்சவங்க, எதுவாயிருந்தாலும் யோசிச்சு செய்வாங்க அவ்வளவு சீக்கிரம் அவங்களை ஏமாத்த முடியாது என புகழ்ந்து பேசிய தனுஷ் வீடியோ இப்பொழுது வைரலாகிறது.