• Tue. Jun 6th, 2023

அஜித்துடன் அம்பானி சங்கர் – வைரலாகும் புகைப்படம்

Mar 18, 2022

நடிகர் அஜித் பிரபல நகைச்சுவை நடிகரான அம்பானி சங்கரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கும் என தெரிகிறது.

இதற்கு இடையில் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாள் விழாவில் இருந்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்படும் அம்பானி சங்கரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.