• Tue. Dec 3rd, 2024

விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

Mar 21, 2022

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து கடுமையான புகை எழுந்துள்ளது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்

இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும், விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதனிடையே, விபத்துக்கு முன்பாக விமானம் தலைகீழாக பாய்ந்து செல்லும் காட்சிகள் சீனாவில் உள்ள ஊடகங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

உள்ளூர் சுரங்க நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது.