ரஷ்யா மிகவும் ஆபத்தான காலிபர் ஏவுகணைகளை, உக்ரைன் மீது செலுத்திய காணொளியை ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது.
2,500 கிலோமீட்டர் தூரம் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் உக்ரைனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள் உக்ரைன் நாட்டின் ஜோட்டிமிர் நகரில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
குறுகிய தூர இலக்குகளைத் தாக்க காலிபர் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் காலிபர் ரக ஏவுகணைகளைக் கொண்டுதான் உக்ரைனின் ராணுவத் தளவாடங்களையும், அரச அலுவலகங்களையும் ரஷ்யா சேதப்படுத்தமை தெரியவந்துள்ளது.