• Tue. Dec 3rd, 2024

படம் கைவிடப்பட்டது – அதிருப்தியில் அட்லி

Mar 30, 2022

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் இணையத்தில் பரவின.

இந்த செய்தி தெரிந்து அட்லி இப்போது சமூக வலைதளங்களில் இதுபோல செய்திகளை பரப்புபவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக மூன்று ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி.

படத்தின் சில முக்கியமானக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இந்த வதந்தி செய்தி அவரை அதிருப்தி அடைய செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.