• Wed. Jan 15th, 2025

நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் – எதற்காக தெரியுமா?

Jun 24, 2021

ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஸ்விகி மூலம் ’மூன் லைட் ரெஸ்டாரன்ட்’ என்னும் உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது முதல் முறையல்ல என்றும், மூன் லைட் ரெஸ்டாரன்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.