சமீபத்தில் வெளிவந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியின் விவாகரத்து தான்.
இது வெறும் கணவன் மனைவி சண்டை தான், இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று தகவல் வெளியானது.
ஆனால் அது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. விவாகரத்து பின் மீண்டும் இயக்கத்தில் கவனத்தை செலுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.