• Thu. Jun 1st, 2023

எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் – விக்னேஷ் சிவன்

Mar 18, 2022

அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை அடுத்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் என்றும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கொடுத்த அஜித் அவர்களுக்கு நன்றி என்றும் அவருடன் பணி புரிவது தனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது என்றும் இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் இசை அரசன் அனிருத் அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.