• Sat. Oct 26th, 2024

கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

Nov 30, 2021

நடிகர் கமல் ஹாசன் நலமுடன் இருப்பதாகவும், ஆனால் இன்னும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்றும் மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல் ஹாசன், தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த வாரம் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனால் தன்னை மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீடியோவில் தோன்றி, தான் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கமல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக இணையத்தில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் அதில் உண்மையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோவில் காலில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியப்போது வெளியானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தலைவர் நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.