நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலில் இருந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வருகிற மார்ச் 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.