• Thu. Mar 20th, 2025

தன்னை விட வயது குறைந்தவருடன் கை கோர்க்கும் அனுஷ்கா

Jun 7, 2021

நடிகை அனுஷ்கா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

பிரம்மாண்ட பாகுபலி திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலென்ஸ் என்ற திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகை அனுஷ்கா இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் 31 வயதேயான நவீன் போலீஷெட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் 25 வயது இளைஞன், 40 வயதான பெண்ணுடன் காதல் கொள்வதே இப்படத்தின் கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.