• Mon. Dec 11th, 2023

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரை ஆதரிக்கும் யாஷிகா

Jun 6, 2021

நாகினி 3 என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் பியர்ல் வி புரி. மும்பை சேர்ந்த இவர் சிறுமி ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதற்கான வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து குறித்த நடிகருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந். தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு தெரிந்த நல்ல மனம் கொண்ட மனிதர்களில் இவரும் ஒருவர். ஆதலால் உண்மை தெரியும் வரை காத்திருக்கலாம்.

என் நண்பர் திரும்பி வரும் வரை காத்திருப்பேன் என்றும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் யாஷிகா வெளியிட்டுள்ள இந்த பதிவு ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.