• Wed. Dec 4th, 2024

லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் பிக்பாஸ் புகழ் கவின்!

Oct 4, 2021

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் நடிப்பில் அண்மையில் ஓடிடி-யில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருவதால், அவர் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.