பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கோலாகலமாக அறிமுகம் செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:
- இசைவாணி
- ராஜூ ஜெயமோகன்
- மதுமிதா
- அபிஷேக் ராஜன்
- நமிதா மாரிமுத்து
- பிரியங்கா
- அபினய்
- சின்னப்பொண்ணு
- பவானி ரெட்டி
- நதியா சங்
- வருண்
- இயக்கி பெர்ரி
- இமான் அண்ணாச்சி
- ஸ்ருதி பெரியசாமி
- அக்சரா ரெட்டி
- தாமிரா செல்வி
- சிபி சந்திரன்
- நிரூப் நந்தகுமார்