• Thu. Dec 19th, 2024

பிக் பாஸ் சீசன் 5 – அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு

Sep 20, 2021

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் அதிகாரபூர்வமாக தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது என்பதும் அவர்கள் அனைவரும் தற்போது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று அதிகாரபூர்வ தேதியுடன் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.