• Tue. Nov 5th, 2024

நீதிமன்றில் ஆஜராகிய கங்கனா

Sep 21, 2021

இந்தி பாடலாசிரியரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஆஜராகாவிட்டால் கைது என எச்சரிக்கப்பட்ட நிலையில் கங்கனா ரனாவத் ஆஜராகியுள்ளார்.

இந்தியில் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் இந்தியில் பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த கங்கனா ரனாவத் நீண்ட காலம் கழித்து தமிழில் தலைவி படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜேவ்ட் அக்தர் குறித்து கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கங்கனா ரனாவத் நேரில் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இதனால் உடனடியாக நீதிமன்றத்தில் நேரில் கங்கனா ஆஜரான நிலையில் இருதரப்பையும் விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்துள்ளது.