
பிக் பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியது.
நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால், தீடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது தான், விலகுவதாக கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு யார் அடுத்து தொகுப்பாளர் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இதன்பின், கமல் ஹாசனுக்கு பதில் நடிகர் சிம்பு தான், இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக, ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.