• Sun. Dec 1st, 2024

சண்டை காட்சிகளில் உங்கள் ரத்தமும் சதையும் கலந்துள்ளது – அஜித்தைப் புகழ்ந்த பிரபலம்

Mar 22, 2022

நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகி இருந்தது. வசூல் ரீதியாக படம் பெரிய சாதனை படைத்து இருந்தது. எச் வினோத் இயக்கிய இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாகவும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 25-நாட்கள் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்தின் 25-வது நாளில் அஜித்திற்கு நன்றி சொல்லி படத்தின் தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :

அஜித் அவர்களின் அர்ப்பணிப்பு , திறமை , கவனம் போன்ற அனைத்தையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன்.படத்தின் சண்டை காட்சிகள் எவ்வாறு வந்திருக்கிறது என அஜித் அவர்கள் என்னிடம் கேட்டார் . அதற்கு நான் “இது போன்ற காட்சியை இதுவரை பார்த்தது இல்லை. சண்டை காட்சிகளில் உங்கள் ரத்தமும் சதையும் கலந்துள்ளது” என தெரிவித்தேன்.