• Wed. Nov 29th, 2023

தல அஜித்தை கிண்டலடித்த தனுஷ்!

Jun 20, 2021

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளது என்று பல விமர்சனங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நடிகர் தனுஷ் பேசிய வசனத்தினால், தல அஜித்தின் ரசிகர்கள் தற்போது கடுப்பாகியுள்ளனர்.

ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில், சிட்டிசன் படத்தில் இடம்பெறும், அத்திப்பட்டீனு ஒரு கிராமம், நான் தனி ஆள் இல்ல, என்று வசனத்தை தனுஷ் பேசியிருந்தார்.

இதனை பார்த்த தல அஜித்தின் ரசிகர்கள் பலரும், தற்போது கடுப்பாகி, சமூக வலைத்தளத்தில் தனுஷை திட்டி தீர்த்து வருகின்றனர்.