• Sun. Oct 1st, 2023

பன்முகத்தன்மை கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று!

Jun 20, 2021

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று.

ரேடியோ சேனல்களில் தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்குள் துணை கதாப்பாத்திரங்கள் மூலமாக அறிமுகம் ஆனவர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோ தொகுப்பாளராக இருந்ததால் இடைவிடாமல் தொணதொணக்கும் அவர் பேச்சு தமிழ் சினிமா காமெடியில் அவருக்கென தனி அடையாளத்தை தந்தது.

தொடர்ந்து அரசியல் ரீதியான பொது விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வரும் ஆர்.ஜே பாலாஜி, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்டவற்றிலும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இயக்குனராக மூக்குத்தி அம்மன் போன்ற மத அரசியலை பகடி செய்யும் படங்களையும் எடுத்து தமிழ் சினிமாவில் தனது அடையாளத்தை பதித்துள்ளார். கலாய் காமெடியில் அசத்தும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.