• Fri. May 9th, 2025

விக்னேஷ் சிவனுடன் இணையும் துருவ் விக்ரம்

Nov 27, 2021

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால் மாரி செல்வராஜ் இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருவதால் துருவ் விக்ரம் படத்தைத் தள்ளிவைத்துள்ளார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் துருவ். அதற்காக விக்னேஷ் சிவனிடம் கதைக் கேட்டு அதை ஓகே செய்துள்ளாராம். விரைவில் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.