• Tue. Sep 10th, 2024

விரைவில் மற்றுமொரு இந்தி படத்தில் துல்கர் சல்மான்

Oct 12, 2021

பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தி சினிமாவில் பா, சீனிகம் ,ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பால்கி. இவர் ஒரு இந்தி படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், சன்னிலியோன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு சுப் என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு இந்திப் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு சுப் 3 வது இந்திப் படமாகும்.