• Sat. Oct 12th, 2024

தங்கப்பதக்கம் புகழ் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்

Oct 12, 2021

தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலமானார்.

தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு வயது தற்போது 82 ஆகிறது.

1965 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.
அதன்பின்னர் சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தார்.