• Mon. Apr 15th, 2024

சூப்பர் ஸ்டாரை பார்க்க ஆர்வமாக உள்ளேன் – தனுஷ் பட நடிகர்

Jul 1, 2021

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக தனுஷ் பட நடிகர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

இந்நிலையில் நடிகர் ஜோஜு பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சினிமாவில் நான் நடிக்கவேண்டுமென்று வாய்ப்புத் தேடி அலையும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி சார் ஆகிய இருவரையும் தான் அதிசயமாகப் பார்த்தேன்.

இதுவரை நான் ரஜினி சாருடன் இணைந்து புகைப்படம் எடுத்ததில்லை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியுள்ளேன் . இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.