• Fri. Jul 26th, 2024

நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது – கஸ்தூரி ட்வீட்

Jun 30, 2021

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

மருத்துவ பரிசோதனைக்குச் செல்வதையொட்டி மத்திய அரசிடம் அனுமதி வாங்கி சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். மேலும் நடிகர் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் சென்றனர்.

ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் சரமாரியான கேள்விகளைக் கேட்டு இருந்தார். “ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். இந்தியாவில் சிகிச்சை பெற முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது.” என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கஸ்தூரி இன்று மீண்டும் இன்ஸ்டாகிராமில், “என் கேள்விக்கான பதிலை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினர். இது எனக்கு ஆச்சரியம் கலந்த நன்றியாக உள்ளது. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தியை நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புத்துணர்வுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த” என்ற பதிவிட்டுள்ளார்.