பிரபல இந்தி நடிகர் அமீர் கானும் அவரது மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்து கொள்வதாக பரஸ்பரமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் அமீர் கான் முதலில் நடிகை ரீனா தத்தை திருமணம் செய்துக் கொண்டார்.
இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், 2002-ல் ரீனா தத்தை விவாகரத்து செய்துவிட்டு, தான் நடித்த லகான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண்ராவை அமீர் கான் திருமணம் செய்துக் கொண்டார்.
அமீர் கான் – கிரண் ராவ் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 15வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அமீர் கானும், கிரண் ராவும் அறிவித்துள்ளனர்.