வலிமை படத்திற்குப் பிறகு அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அஜித்குமார் – இயக்குநர் வினோத் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் திகதி ரிலீசாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்றாவது முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
அஜித்குமாரின் 61 வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கும் போனி கபூரே தயாரிப்பாளர் என்றும் கூறப்பட்டது. தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டு அதனை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் பகிர்ந்த கண்ணாடி அணிந்து தாடி வைத்தது போன்ற அஜித் குமாரின் கருப்பு வெள்ளை புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மற்றொருபுறம், இந்த புகைப்படம் அசல் திரைப்படத்தின் அஜித் குமாரையே நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.