• Sat. Sep 23rd, 2023

ஹே சினாமிகா படத்தின் அப்டேட் இதோ!

Feb 15, 2022

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 25-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 16-ந்தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.