• Thu. Oct 31st, 2024

நடிகர் தனுஷூக்கு கிடைத்த உயரிய விருது!

Oct 25, 2021

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார்.

அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

தேசியவிருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் தனுஷுக்கு வழங்கினார்.

இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.