பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நடிகை வனிதா கவனம் பெற்றார் .
தொடர்ந்து வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார .
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அதுகுறித்தும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார் வனிதா.
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இயக்கி நடிக்கும் பிக்கப் ட்ராப் படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சமீபத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் வனிதா இருந்த புகைப்படம் வைரலானது. அதைத்தொடர்ந்து பவர் ஸ்டார் வனிதா கழுத்தில் தாலி கட்டும் புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொரோனா தொற்று காலத்தில் நாம் உயிருடன் இருப்பதே பெரிய பிளெஸ்ஸிங். இந்த சூழலில் மீண்டும் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதில் எனக்கு பெரிய ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையான விஷயம் என வனிதா பேட்டியில் கூறியுள்ளார்.
அதோடு , வீட்டில் எலி வெளியே புலி போல கணவன் மனைவியிடம் குழந்தையாக தான் இருக்க வேண்டும் எனவும், மனைவி தாய் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அது தனக்கு அமையவில்லை எனவும் பேட்டியில் கூறியுள்ளார்.
தங்களுக்கு பிடித்த டாப் 3 கப்புல்ஸ் யாரென்ற கேள்விக்கு, குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை நிறைய கப்புல்ஸ்களை பார்த்துள்ளேன், குறிப்பாக தன் அப்பா, அம்மாவை பார்க்கும் பொழுது இன்று வரையில் பொறாமையாக இருக்குறது என வனிதா கூறியுள்ளார்