• Tue. Sep 10th, 2024

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பிரபலம்!

Nov 9, 2021

கமல்ஹாசனின் அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிய உள்ளது.

இதனை அடுத்து அவர் இந்தியன் 2 படத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்றும் அதன் பின்னரே அவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

பா ரஞ்சித் மற்றும் கமல்ஹாசன் இணையும் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது