• Fri. Jul 26th, 2024

புனீத்தின் குடும்ப மருத்துவருக்கு போலிஸ் பாதுகாப்பு

Nov 8, 2021

மறைந்த நடிகர் புனீத்தின் குடும்ப மருத்துவர் மற்றும் அவரது மருத்துவமனைக்கு போலிஸ் பேட்ரோல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் உடல் பயிற்சி மற்றும் உணவு ஆரோக்ய விஷயத்தில் மிகவும் அக்கறைக் கொண்டவர்.

இந்நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்த, இதனால் புனீத்தின் குடும்ப மருத்துவரான ரமணா ராவின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலிஸ் பேட்ரோல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.