இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் வரும் 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில், சந்தோஷ் சுப்பிரமணியம் இசையமைப்பில், விவேக் எழுதிய
4 வது சிங்கில் நேற்று(08) வெளியாகி இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது,
“இப்படம் தியேட்டரில் வெளியாகி இருக்கலாம் என நினைத்தாலும் தற்போது ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக இப்படம் இருக்கும்.
இப்படத்தில் நான் சுருளி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதன் தொடர்ச்சியான பாகங்கள் கொண்டுவர வேண்டுமென நான் கார்த்திக் சுப்புராஜைக் கேட்டுகொண்டிருப்பேன். அந்தளவுக்கு இந்தப் படம் எனக்குப் பிடித்துள்ளது. எனது ரசிகர்களுக்கும் இது பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் மாரி படம் தான் பார்ட் 2 வெளியான நிலையில் தற்போது ஜகமே தந்திரம் பார்ட் 2 வெளியாகும் என தனுஷ் கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.