அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்பதற்கு நடிகை கங்கனா ரணவத் பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட திரையுலகினரை கங்கனா கடுமையாக சாடி வருகிறார்.
இதனால் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது. பாஜக சார்பில் அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. களத்தில் நிற்காமல் ஒருவரால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றிபெற முடியாது என்று உறுதியாக நம்புகிறேன். மக்கள் உங்களை பார்க்க வேண்டும்.
ஒருவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால், மக்களின் உண்மையான நன்மதிப்பை பெற வேண்டும். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.