• Tue. Nov 5th, 2024

விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தவுள்ள ரஷ்யா

Sep 14, 2021

விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த ரஷ்ய படக்குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல உள்ளனர்.

தொழில்நுட்ப வசதியால் உலகம் முழுவதும் படப்பிடிப்பு பாணிகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஹாலிவுட் உள்ளிட்ட பல சினிமா துறைகளில் கடலுக்கு அடியில், விமானத்தில் என பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தி படங்கள் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் விண்வெளியில் மட்டும் கால்பதிக்காமல் இருந்த திரைத்துறையினர் தற்போது விண்வெளியிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது படப்பிடிப்பை சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்த திட்டமிட்டார்.

இந்நிலையில் தற்போது ரஷ்ய படக்குழு ஒன்று அக்டோபர் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளது. இதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்ற நிலையில் படக்குழுவினர் விண்வெளி செல்வதற்கான முன் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்ய இயக்குனர் க்ளிம் ஷிபென்கோ இயக்கும் “சேலஞ்ச்” என்ற இந்த படத்தில் ரஷ்ய நடிகர் யுரியா பெரிசில்ட் நடிக்கிறார்.