• Fri. Nov 15th, 2024

நடிகர் ஆர்யா இலங்கைப்பெண் விவகாரத்தில் புதிய திருப்பம்!

Sep 4, 2021

ஜெர்மனி பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட வழக்கிற்கும் நடிகர் ஆர்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பொலிஸ் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கை பெண் வித்ஜா இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது ஹுசைனி ஆகியோர் கைது செய்யபட்டனர்.

அது தொடர்பில் ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன், நடிகர் ஆர்யா தான் பணமோசடியில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கோரினார்.

இதையடுத்து, கடந்த 2ம் திகதி நடிகர் ஆர்யா பொலிஸ் ஆணையர் சங்கர் ஜிவாலை நடிகர் ஆர்யா சந்தித்துப் பேசினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,

“நடிகர் ஆர்யா போல் நடித்து ஜெர்மன் பெண்ணை ஏமாற்றிய குற்றவாளி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையின் படி நடந்த விசாரணையில் ஆர்யாவிற்கும் இவ்விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” எனவும் அவர் தெரிவித்தார்.