• Wed. Dec 4th, 2024

பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் என யாரும் வேண்டாம்

Jan 3, 2022

மலர் டீச்சர் என்ற ஒரு கேரக்டரின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரவுடி பேபி சாய் பல்லவி.

இவர் அறிமுகமான முதல் படமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதன் பிறகு மலையாள சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார். பின்னர் தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் படங்களில் நடிப்பதோடு வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாவ கதைகள் என்னும் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் அவர் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக சாய் பல்லவி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சில கண்டிஷன் போடுகிறாராம். அதாவது பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் என்று எதுவும் வேண்டாம், என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் போதும்.

சும்மா பாடல்களுக்கு வந்து டான்ஸ் ஆடுவது, 4 காட்சிகளில் நடித்து விட்டுப் போவது போன்ற கதைகளில் இனி நான் நடிக்க மாட்டேன். என்னுடைய திறமையை காட்டும் படியான கேரக்டர் எனக்கு வேண்டும்.

அதைத் தான் என்னுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள், அப்படி ஒரு கதை இருந்தால் மட்டும் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் ரொம்பவும் கறாராக பேசுகிறாராம். இதனால் அவருக்கு குறிப்பிட்ட சில பட வாய்ப்புகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

அதிக பட வாய்ப்புகள் வராவிட்டாலும் பரவாயில்லை, என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் போதும் என்று சாய்பல்லவி சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.