• Fri. Jul 26th, 2024

தியேட்டர் வேணாம்; டிவி சேனலில் ஒளிபரப்பாகவுள்ள விஜய் சேதுபதி படம்!

Jul 20, 2021

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படம், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி சன் டிவியில் முதல் முறையாக (World Television Premiere) ஒளிபரப்பு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

அவர் நடிப்பில் பல திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அவற்றில் “துக்ளக் தர்பார்”, “இடம் பெருள் ஏவல்”, “காத்துவாக்குல இரண்டு காதல்”, “மாமனிதன்”, “கடைசி விவசாயி” மற்றும் “லாபம்” ஆகியன குறிப்பிடத்தக்க படங்களாகும்.

இதில் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலில் கைப்பற்றியது. அதன் பின்னர் சில காரணங்களால் இந்த உரிமை சன் டிவிக்கு கைமாற்றப்பட்டது.

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் இன்னும் திறக்காததால் துக்ளக் தர்பார் திரைப்படம், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி சன் டிவியில் முதல் முறையாக (World Television Premiere) ஒளிபரப்பு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதே நாளில் நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி இருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.