• Sat. Dec 9th, 2023

படப்பிடிப்பில் படுகாயமடைந்த விஷால்

Jul 21, 2021

பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’.

இப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின்போது, நடிகர் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் விஷாலுக்கு பிஸியோதெரபிஸ்ட் வர்மா சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.