• Fri. Jul 26th, 2024

சமூக வலைதளவாசிகளிடம் திட்டும் வாங்கும் பார்த்திபன்

Jul 8, 2021

பாலிவூட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் தனது 98ஆவது வயதில் நேற்று காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் திலீப் குமார் பற்றி போட்ட ட்வீட் சமூக வலைதளவாசிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. பார்த்திபன் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர்.

இந்நிலையில் திலீப் குமாரின் பெயரை சற்று மாற்றி diRIP kumar என்று டுவீட் செய்தார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் , உங்கள் எதுகை மோனையில தீய வைக்க. இதற்கு பெயர் கிரியேட்டிவிட்டி கிடையாது ப்ரோ. ஒருவர் இறந்தபோது இப்படி எல்லாம் செய்யக் கூடாது. உங்களின் கற்பனை திறனை பார்த்து வியக்கிறோம். ஆனால் இரங்கல் டுவீட்டில் இப்படி செய்வது மிகவும் தவறு என அறிவுரை கூறியுள்ளனர்.

அதோடு திலீப் குமாரை கிண்டல் செய்வது போன்று உள்ளது உங்களின் டுவிட். தயவு செய்து இந்த டுவிட்டை நீக்கிவிடுங்கள். நீங்கள் என்ன பார்த்திபனா இல்லை Barத்திபனா என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பார்த்திபனின் அந்த டுவிட்டை நீக்குவது எப்படி என்று கூட சிலர் கூகுளில் தேடியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.