• Thu. Nov 30th, 2023

படப்பிடிப்பு முடியும் நிலையில் பொன்னியின் செல்வன்

Aug 10, 2021

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முடியவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வந்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடக்கிறது. இன்னும் சில காட்சிகளை வட இந்தியாவில் படமாக்கிவிட்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியோடு முடிய உள்ளதாம்.