• Fri. Jul 26th, 2024

நுழைவு வரியை செலுத்தினார் விஜய்!

Aug 10, 2021

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு, தளபதி விஜய், 40 இலட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக, வணிக வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

குறித்த காரை 2012 இல் தளபதி விஜய் இறக்குமதி செய்திருந்தார். கார் வாகன பதிவுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றபோது, நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக வணிக வரி உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தளபதி விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில், தளபதி விஜய் நுழைவு வரியாக, 40 இலட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.