• Tue. Sep 10th, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா?

Sep 7, 2021

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் பிஸியான ஒரு விஜே பிரியங்கா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சீசனில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது போலவே இந்த முறையும் பிரியங்கா சென்று தன்னுடைய பெயரை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனி, சுனிதா, பவானி ரெட்டி, சூஸன் உள்ளிட்டோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.