• Fri. Mar 22nd, 2024

சிறப்பு விமானத்தில் குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்ல உள்ள ரஜினி

Jun 14, 2021

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் குடும்பத்தினரும் உடன் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி.

சிகிச்சை முடிந்ததும் சிறிது காலம் அங்கேயே தங்கி, அதன்பின் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கின்றனர்.