• Sun. Dec 1st, 2024

வெளியானது வலிமை திரைப்பட சூப்பர் ஸ்டில்

Dec 28, 2021

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்றை படக்குழுவினர் இணையதளங்களில் வெளியிட்ட நிலையில் இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் அட்டகாசமான ஸ்டைலிஷ் ஆக இருக்கும் இந்த புகைப்படத்தில் நாயகி ஹூமோ குரேஷியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் அதிகமான அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ’வலிமை’ படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் என படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.