• Mon. Sep 25th, 2023

ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார்

Sep 14, 2021

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு, மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அனுப்பி உள்ளது.

தோஹா விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆப்கனுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதேவேளை தலீபான் அமைப்பினருடன் ஆரம்பம் முதலே கத்தார் அணுக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.